டிக்டாக்கிற்கு போட்டியாக உருவெடுத்த ‘சிங்காரி’ செயலி
இந்நிலையில் டிக்டாக் செயலிக்குப் போட்டியாக பெங்களூரைச் சேர்ந்த பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கவுதம் ஆகியோர் ‘சிங்காரி’ என்கிற புதிய செயலியை கடந்தாண்டு அறிமுகப்படுத்தினர். முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியின் மூலம் நண்பர்களுடன் மெசெஜ் அனுப்பி சாட் செய்யவும், வீடியோவை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்யவும் முடியும். அதோடு, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், வீடியோ கிளிப்ஸ், ஆடியோ கிளிப்ஸ், ஜிஐஎஃப் ஸ்டிக்கர்ஸ் மற்றும் புகைப்படங்களை உருவாக்கவும், புதிய நண்பர்களுக்கு மெசெஜ் அனுப்பவும், இணையத்தில் பிறவற்றை தேடி பார்க்கவும் முடியும். மேலும் சிறப்பு வசதியாக செய்திகள், நகைச்சுவை வீடியோக்கள், பாடல்கள், ஸ்டேட்டஸ் வீடியோக்கள், தத்துவ வாக்கியங்கள், மீம்ஸ் ஆகியவற்றையும் இந்த செயலியில் காண முடியும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம், வங்க மொழி, பஞ்சாபி, குஜராத்தி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 10 மொழிகளில் பயன்படுத்த கூடிய இந்த செயலியிலும் டிக்டாக்கை போன்று பணம் சம்பாதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா விவகாரம் தொடங்கியதில் இருந்து சீன பொருட்களை தவிர்த்து இந்திய தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் ‘சிங்காரி’ செயலிக்கு தற்போது மவுசு அதிகரித்து வருகிறது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமாணோர் இதைப் பதிவிறக்கம் செய்துள்ளதில் அது தெரியவருகிறது.


No comments